பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் என குறைந்த அளிவில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும்,  காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு 8 ஆம் தேதிக்குகள் முடிவுக்கு வரும் எனவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மகளீர் அணி செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.  

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றன. அதிமுக- தேமுதிகவிடையே இழுபறி நீடிப்பதுபோலவே,  திமுகவில் அங்கம் வகித்துவரும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

41 இடங்களை கொடுத்தே ஆகவேண்டும் என காங்கிரஸ் திமுகவிடம் முரண்டு பிடித்து வருவதால் தொடர் இழுபறி நீடிக்கிறது. இதனால் காங்கிர- திமுக கூட்டணி என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதேபோல் திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுடன் தொகுதி பங்கீடு நிறைவுபெற்றிருந்தாலும் 6 என்ற குறைந்த அளவிலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக மகளீர் அணிச் செயலாளர் கனிமொழி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரிய இயக்கமாக உள்ள காங்கிரஸ் கட்சி சில தொகுதிகளை கேட்டுள்ளது. 7 அல்லது 8ம் தேதிக்குள் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "குறுகிய காலத்தில் தமிழக்கத்தின் முன்னேற்றங்கள்" என்பது குறித்து 11ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும். மேலும், கடந்த 4 வருடங்களாக திமுகவின் சொல் என்னவோ அதுவே அதிமுகவின் ஆட்சியாக இருந்தது. இனிவரும் காலங்களில் திமுகவே சொல் என்பதற்கு பதிலாக செயல் என்பது முழுமையாக இருக்கும். 

பாராளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களை வைத்தே, 2021 சட்டமன்ற இடங்களும் தீர்மானிக்கப்படுகிறது. கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை; விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட காரணம் பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் கொடுத்துள்ளோம்  என்பதை சட்டமன்ற தேர்தலில் குறைவாக இருக்கலாம். 
என அவர் கூறினார்.