சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையை பெறலாம் எனவும் தவறும் பட்சத்தில் ஆண்டிற்கு இரண்டு சதவீத தண்டனை தொகையுடன் செலுத்த நேரிடும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 104 இன் படி சொத்தின் உரிமையாளர்களால் அந்தந்த அரையாண்டு துவங்கிய  முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரியானது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும். சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919க்கு அரசால் தமிழ்நாடு சட்டங்கள் மற்றும் அவசர சட்டங்கள் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. 16-8-2018 நாளிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டத்திருத்தம் அரசாணையின் படி 1-10-2019 தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு அதிகாரி மன்றத் தீர்மானம் எண் 666-2020 நாள் 22-9-2020இல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அரசால் வெளியிடப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டவிதிகள் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15 ஆம்  தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி தொகை செலுத்த படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய நிகர சொத்து வரி தொகையுடன் கூடுதலாக ஆண்டிற்கு இரண்டு சதவீதம் மிகாமல் தனி வட்டியுடன் தண்ட தொகையாக விதித்து வசூலிக்கப்படும். 

சொத்து உரிமையாளர்கள் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் விளைவாக மாநகராட்சிக்கு ஊதிய நிலுவைத் தொகை ஏதேனும் செலுத்தப்பட வேண்டி இருப்பின் ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 15 தினங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஆண்டிற்கு இரண்டு சதவீதம் தனிவட்டி உடன் செலுத்தப்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு அரையாண்டு துவக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15 ஆம்  தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி தொகையினை செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு செலுத்தப்படும் நிகர சொத்து வரிகள் 5% அதிகபட்சமாக ரூபாய் 5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 

.மேற்படி சட்ட திருத்தம் தொடர்பான விவரம் அரசுகள் உள்ளூர் நாளிதழ் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919க்கு அரசால் வெளியிடப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை ஒவ்வொரு  அரையாண்டு துவக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் பதினைந்தாம்  தேதிக்குள்ளும் இரண்டாம் அரையாண்டில் தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் பதினைந்தாம் தேதிக்குள்ளும் உரிய வழிமுறைகளின் படி செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றிடலாம், மேற் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து வரி செலுத்தத் தவறும் பட்சத்தில் விதிகளின்படி செலுத்த வேண்டிய தொகைக்கு ஆண்டுக்கு 2% தண்ட தொகையுடன் செலுத்த நேரிடும், எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை செலுத்துமாறு ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.