This is the only thing in the world that can only be achieved - CR
உலகத்திலேயே பிரதமரின் புகைப்படத்தை போட்டு அரசு காலண்டர் எங்கேயாது பார்த்துரிக்கீங்களா எனவும் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும் டிடிவி தினகரன் ஆதராவாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார் என பரபரப்பு தகவலை வெளியிட்டவர் அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதி.
.jpg)
பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபோது அவருக்கு ஆதரவாக மக்கள் பலரும் பக்க பலமாக இருந்து வந்தனர். அப்போது சி.ஆர். சரஸ்வதி சசிகலாவுக்கு ஆதரவாக சின்னம்மா... சின்னம்மா என்று குரல் கொடுத்து கொண்டிருந்தார்.
இதனால் கடுப்பான பொதுமக்கள் சி.ஆர்.சரஸ்வதிக்கு போன் போட்டு செம்ம திட்டு திட்டிருக்காங்க. அதையும் நேரடியாக வந்து தன்னை கொச்சையான வார்த்தையில் சிலர் திட்டுவதாக கமிஷனர் அலுவலகத்திலேயே புகார் கொடுத்தாங்க சி.ஆர். சரஸ்வதி.
.jpg)
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் அவங்க ஆதரித்து வந்த டிடிவிக்கு துணையா நிக்கிறதுன்னு முடிவு பண்ணுனாங்க. ஆனால் எடப்பாடியே பன்னீர் பக்கம் சாய்ந்ததுனால டிடிவி குரூப் தனி டீமா வெளிய போனாங்க.
இதனிடையே ஜெ இட்லியெல்லாம் சாப்பிடல. அவங்க சாப்பிடலன்னு சொன்னா மக்கள் யாரும் சாப்பிடமாட்டாங்கன்னு பொய் சொன்னோம்ன்னு பகீர் பேட்டியை வெளியிட்டாங்க சி.ஆர்.
.jpeg)
இதையடுத்து அடுத்தடுத்து அடிக்கடி பேட்டி கொடுத்த வந்த சி.ஆர். சரஸ்வதி திடீர்ன்னு மீடியா பக்கமே வராம இருந்தாங்க.
இந்நிலையில் ஓரங்கட்டப்பட்டு இருந்த டிடிவி சுயேட்சையா நின்னு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல ஜெயிச்சிட்டாரு. இதுக்கப்புறம் சொல்லவா வேணும். மீண்டும் ஓங்க ஆரம்பிச்சிடுச்சி டிடிவி டீம் குரல்.
.jpeg)
இதனிடையே தமிழக அரசு காலண்டரில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோரை டம்மியாக வைத்து பாஜக தமிழகத்தில் மறைமுக ஆட்சி நடத்துகிறது என்றும் அதிமுகவின் இரட்டை இலை தாமரைப்பூவின் இலைகள் போல உள்ளன என்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதைதொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி, உலகத்திலேயே பிரதமரின் புகைப்படத்தை போட்டு அரசு காலண்டர் எங்கேயாது பார்த்துரிக்கீங்களா எனவும் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும் தெரிவிச்சிருக்காங்க.

மேலும் ஆர்.கே.நகர் வெற்றி மாபெரும் வெற்றி எனவும் மத்திய ஆட்சியின் தயவில் இருக்கும் ஆளுங்கட்சியை எதிர்த்து ஜெயித்திருப்பது சாதாரண விஷயமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
