ஆட்சிக்கு வந்ததும் இதுதான் முதல் வேலை... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..!

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களின் நம்பிக்கையை நிறைவேற்றியே தீருவேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

This is the first job when stalin came to power...!

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பிரசாரத்தைத் தொடங்கினார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்பது இந்த பிரசாரத்தின் நோக்கமாகும். முதல் கட்டமாக திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

 This is the first job when stalin came to power...!
 நான்கு தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களையெல்லாம் ஒரு பெட்டியில் போட்டு மு.க. ஸ்டாலின் சீல் வைத்தார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த சீலை உடைத்து பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், “ கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் தொகுதிகள்கூட மோசமான நிலையில் உள்ளன.
அடுத்த திமுகதான் ஆட்சிக்கு வரப் போகிறது. அந்த நம்பிக்கையில்தான் பொதுமக்கள் மனுக்களை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையை நான் நிறைவேற்றியே தீருவேன். மனுக்களை போட்டு வைத்திருக்கும் பெட்டியின் சாவி என்னிடமே இருக்கும். திமுக வெற்றி பெற்று பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் அந்தப் பெட்டியை திறப்பேன். உங்கள் பிரச்னைகளைத் தீர்க்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்” என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். This is the first job when stalin came to power...!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios