குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் திமுக ஆட்சியில் போராட்டங்களின் போது நடந்த சம்பவத்தை பற்றி முரசொலி நாளேட்டில் விமர்சனக் கட்டுரை வெளியாகி உள்ளது.அதில், ‘’1967ல் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மாணவர்கள் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கினர்.  டிசம்பர் 21ஆம் தேதி மதுரை ரயில் நிலையம் மாணவர்களின் கல்வீச்சில் பெரும் சேதம் அடைந்தது.

அன்று இரவு சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மறியல் செய்தபோது புகை வண்டிகள் தாக்கப்பட்டன. 6 பெட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக நடந்த போராட்டத்தில் ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 15 லட்சத்து லட்சத்திற்கும் மேற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்காக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் 1968 ஜனவரி 21-ஆம் நாள் மொழிப்பிரச்சினை மட்டும் விவாதிப்பதற்காக சட்டப்பேரவையை கூட்டினார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதுமே காங்கிரஸார் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக சட்டப்பேரவையை அவசரம் அவசரமாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அண்ணா மாணவர்கள் யார் நம் ரத்தத்தின் ரத்தம் சபையின் சதை நம் எதிர்காலத்தில் உருவங்கள் என்று குறிப்பிட்டார். புகைவண்டி பெட்டியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதனால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று காங்கிரஸார் குற்றம்சாட்டினர். அதற்கு அண்ணா 10 பெட்டிகள் இறந்து விட்டால் அவற்றைத் திரும்பச் செய்து கொள்ளலாம். ஆனால் மாணவர்களின் உயிருக்கு ஏதும் ஏற்பட்டால் அவற்றை திருப்பி தர முடியுமா என்று உருக்கமாக கேட்டார்.அதுதான் மனித உயிர்களை பற்றி கழகத்திற்கும் காந்தியடிகளை கொலை செய்த கூட்டத்திற்கு உள்ள வேறுபாடு என பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.