Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்திற்கு விரோதமாக நடந்தால் இதுதான் கதி.. மத்திய அரசை பகிரங்கமாக எச்சரித்த திமுக எம்.பி.

மேகதாது குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஏற்கனவே அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு  எதிராக ஒவ்வொருமுறையும்  செயல்படுவதாகவும், நிச்சயமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுப்பர் என்றும் உறுதிபட தெரிவித்தார். 

This is the case if it happens against Tamil Nadu .. DMK MP who warned the Central Government.
Author
Chennai, First Published Jun 21, 2021, 1:19 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட  500 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவர முதல்வர் அறிவித்தது போல் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முக கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேகதாது குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஏற்கனவே அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு  எதிராக ஒவ்வொருமுறையும்  செயல்படுவதாகவும், நிச்சயமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுப்பர் என்றும் உறுதிபட தெரிவித்தார். 

This is the case if it happens against Tamil Nadu .. DMK MP who warned the Central Government.

அரசின் கோரிக்கைகள் அனைத்துமே கவர்னர் உரையில் இடம் பெற்றிருப்பதாகவும்,  இதேபோல் நாடாளுமன்றத்திலும் முதல்வரின் ஆணைக்கிணங்க இதே கோரிக்கைகளை முன் வைத்து அவைகள் அனைத்தும் வெற்றி பெறும் வகையில் எல்லா விதமான முயற்சிகளையும் எடுப்போம் என்றார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் விவசாயமும் விவசாயிகளும் பாதிக்கப்படும் காரணத்தால் இந்த விவகாரத்திலும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் கொடுத்து அவை நடைபெற விடாமல் தடுத்து நிறுத்துவோம் என்றார். 

This is the case if it happens against Tamil Nadu .. DMK MP who warned the Central Government.

10 ஆண்டுகளாக பொதுமக்களின் வரிப் பணத்தை சுரண்டி கஜானாவை காலி செய்து கிட்டத்தட்ட 60 லட்சம் கோடி ரூபாய் வரை கடன்களை அதிமுக அரசு விட்டு  சென்றுள்ளதாகவும், ஆனால் திமுக சொன்னதுபோல் 4,000 ரூபாய் நிவாரணத் தொகை ரேஷன் கடைகளில் 14 வகையான சிறப்பு தொகுப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி உள்ளதாகவும்,  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், மத்திய அரசு தமிழகத்துக்கு  தர வேண்டிய நிலுவை தொகையினை தர மறுப்பதாகவும் அதையும் நிச்சயமாக மீட்டெடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யபடும் என்றும் அவர் கூறினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios