தமிழ்நாட்டில் கொரோனா வேகமாக பரவ இதுவும் ஒரு காரணம்.. அலறும் ராமதாஸ்.

தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் அத்தியாவசியமற்ற பல பெரிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் கொரோனா வேகமாக பரவும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். 
 
This is one of the reasons for the rapid spread of corona in Tamil Nadu. PMK Ramadass alert.

தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் அத்தியாவசியமற்ற பல பெரிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் கொரோனா வேகமாக பரவும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த 4 நாட்களாக சற்றுக் குறைய தொடங்கியுள்ளது, ஆனாலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை தடுக்க தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது,  மருந்து, பால் விநியோகம் தவிர மளிகை, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும்அடைக்கப்பட்டுள்ளன. 

This is one of the reasons for the rapid spread of corona in Tamil Nadu. PMK Ramadass alert.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் மிகத் தீவிரமாக உள்ளது. முழு ஊரடங்கே கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி என உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சில அத்தியாவசிய தேவைகளுக்காக தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதை பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் எச்சரிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 

This is one of the reasons for the rapid spread of corona in Tamil Nadu. PMK Ramadass alert.

'' தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் அத்தியாவசியமற்ற பல பெரிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலைகள் தொடர்ந்து இயங்குவதால் அந்த ஆலைகளில் கொரோனா வேகமாக பரவுகிறது" அவை மூடப்பட வேண்டும். மின்னுற்பத்தி நிலையங்கள், உணவுப்பொருள் தயாரிப்பு ஆலைகள் போன்றவையே அத்தியாவசியப் பொருள் தயாரிப்பு ஆலைகள் ஆகும், ஆனால்  மகிழுந்து ஆலைகள், கண்ணாடி உற்பத்தி ஆலைகள், உதிரிபாக ஆலைகள் போன்றவை இயங்க வேண்டிய தேவை என்ன?  நிறுவனங்களின் லாபத்தை விட தொழிலாளர்களின் உயிர்கள் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios