This is not the rule of mother The rule of treachery
தியாகத்துக்கும் துரோகத்துக்குமான யுத்தம் நடக்கிறது என்றும், சசிகலாவின் தியாகம் வெற்றி பெறும் என்றும் அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அப்போது,
பதவிக்காக யாசகம் செய்து கொண்டிருந்தவரை தம்முடன் சேர்த்துக் கொண்டு, சசிகலாவை நீக்குவோம் என்று சொல்வது சுயநலத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். 90 சதவீத எம்எல்ஏக்கள் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.
எங்களை அழிப்பதாக நினைத்துக் கொண்டு. இயக்கத்தை அழிக்கப்பார்க்கிறார்கள். தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் யாருடனும் சமரசம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்ததன் பின்னணியில் சசிகலா இருந்தார். தற்போது நடைபெறும் அரசு அம்மா அரசு அல்ல; துரோகத்தின் அரசாங்கம்.
யாரால் நாம் அமைச்சரவையில் இருக்கிறோமோ அவரையே வெளியேற்றும் துரோக செய்ல நடைபெற்று வருகிறது. அதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எங்கள் எம்எல்ஏக்கள் தளபதிகளாக உள்ளனர். துரோகத்தை வெல்பவர்கள் தான் எங்கள் எம்எல்ஏக்கள். எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
