* இலங்கை, முல்லைத் தீவில் தமிழர்களின் பிள்ளையார்கோவிலில் புத்தமத துறவியின் உடலை தீயிட்டு எரித்து, சிங்களர்கள் இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இது போன்ற பிரச்னைகளுக்கு தமீழீழம்தான் ஒரே தீர்வு. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

* டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த அளவுக்கு முதல்வர், இ.பி.எஸ். ஆட்சியில் சிறப்பாக தண்ணீர் கிடைக்கிறது. மேலும் விட்டு விட்டு மழை பெய்வதால் விதைப்பு பயிர்களும் முளைத்துள்ளன. - ஓ.எஸ்.மணியன் (ஜவுளித்துறை அமைச்சர்)

* இந்தியாவின் தந்தையாக மோடியை ஏற்க தயாராக இல்லாதவர்கள், தங்களை ‘இந்தியர்கள்’ என சொல்லிக் கொள்ள முடியாது.-    ஜிதேந்திர சிங் (மத்திய அமைச்சர்)

*  பூமி வெப்பமயமாதல் பிரச்னைதான் உலகில் பேராபத்தை ஏற்படுத்த உள்ளது. இதை தடுக்க, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பெரு நகரங்களில் கார், பஸ், மோட்டார் பைக் போன்ற்றால் கரியமில வாயு வெளியேற்றம் அதிகமாக உள்ளது. இதை தடுக்க, பொதுப் போக்குவரத்து கூடுதலாக்கப்பட வேண்டும். அரசு பஸ்களில் மக்களை இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும்.- அன்புமணி ராமதாஸ் (பா.ம.க. இளைஞரணி தலைவர்)

* பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வுக்கு, ஏற்கன்வே அரசு செயலர்கள், அமைச்சர்கள் கலந்தாய்வு நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் குழு அமைப்பதென்பது கால தாமதத்தை ஏற்படுத்தும்.- துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

* எஞ்சினியிங் கல்லூரியில் பகவத்கீதை பாடம் எதற்கு?...எதிர்ப்பு கிளம்பியதும் “விருப்பம் இருந்தால் படிக்கலாம்” என அண்ணா பல்கலைக்கழகம் கூறுகிறது. இது திட்டமிட்ட இந்துத்வா திணிப்பு. கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் இந்துத்வா கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.- வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

* சின்னம் கிடைத்தபின் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தினகரன் கூறியுள்ளார். அவர் என்ன சின்னத்தை எதிர்பார்க்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவரிடமிருந்த தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவர் என்ன வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். - ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு எம்.எல்.ஏ.)

* பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.வின் அருமையான செயல்திட்டங்களை தமிழக மக்களும், இளைஞர்களும் கவனித்து வருகின்றனர். அதனால் பாரதிய ஜனதாவுக்கு விரைவில் தமிழகத்தில் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.- பொன்.ராதாகிருஷ்ணன் (முன்னாள் மத்தியமைச்சர்)

* எட்டு ஆண்டுகளில் தமிழகம் 1.4 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு பெற்றுள்ளது. நாட்டிலேயே அதிக நேரடி முதலீடு பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். மேலும் மின் மிகை மற்றும் பரவலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள மாநிலமும் இதுவே.- சம்பத் (தமிழக தொழில்துறை அமைச்சர்)

* நான் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில்  இருந்தபோது அரசியலில் நுழைந்தேன். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து என் சொந்த தொகுதியில் என்னை தோற்கடித்தனர். பணத்தை மையப்படுத்தி அரசியல் மாறியுள்ளது. எனவே ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இருக்க வேண்டாம். ஏனெனில் அது மதிப்புக்கு உரியது அல்ல.- சிரஞ்சீவி (நடிகர், மாஜி அரசியல்வாதி)