திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற சுற்றுப்பயணத்தின்போது நான் பெற்ற மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண ஒரு செயலாக்கத் துறையை அமைக்க முதல் கையெழுத்திடுவேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்தால், எந்தெந்த திட்டங்களுக்கு முதன் முதலில் கையெழுத்திடப்படும் என்று பேட்டி அளித்துள்ளார். “முதலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றேன். ஆனால், இப்போது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்கிறேன். இது என்னுடைய கணிப்பு. எங்கு பார்த்தாலும் திமுக அலை பேரலையாக வீசிக்கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற சுற்றுப்பயணத்தின்போது நான் பெற்ற மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண ஒரு செயலாக்கத் துறையை அமைக்க முதல் கையெழுத்திடுவேன். பிறகு குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி, கொரோனா கால நிவாரண நிதி உதவியாக ரூ.4 ஆயிரம் வழங்குவது போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திடப்படும்.” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
