Asianet News TamilAsianet News Tamil

ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக இப்படியா.. இது கொடூரமானது.. எஸ்.டி.பி.ஐ. தீர்மானம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை கொண்டு சேர்ப்பதும், அதை உறுதிப்படுத்துவதும் அந்த நாட்டின் ஆளும் அரசின் கடமையாகும். இதற்காக மனித வளங்களை பயன்படுத்தி கடைகோடி குடிமகனுக்கும் உணவு சென்று சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

This is for the reason that the Aadhaar number is not linked .. This is horrible .. SDBI. Resolution.
Author
Chennai, First Published Apr 13, 2021, 10:32 AM IST

ஆதார் எண்ணை  இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது மிகவும் கொடூரமானது எனவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை கொண்டு சேர்ப்பதும் அதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை எனவும் எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு விமர்சித்துள்ளது. 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் நாட்டின் சமூக, அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதல் தீர்மானம்: 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது கொடூரமானது. ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

This is for the reason that the Aadhaar number is not linked .. This is horrible .. SDBI. Resolution.

இந்த நடவடிக்கையால் ஏழை மக்களின் நிலை என்னவாகும் என்ற கலக்கம் உண்டாகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய பாஜக அரசு நாட்டில் உள்ள ஏழை மற்றும் கூலித்தொழிலாளர்கள் வாழ்க்கையை மிகவும் கடுமையாகவும், இழப்புகள் நிறைந்ததாகவும் உருவாக்குகிறது. ஏற்கனவே நாட்டில் மோசமான ஆட்சி நடைபெறுவதால் மக்கள் ஆதரவற்றவர்களாக கைவிடப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இது மாதிரியான அறிவுக்கு ஒப்பில்லாத செயல்கள் மூலம் மக்களின் வாழ்க்கை மேலும் துயரமாகிறது. ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கான உணவை மறுப்பதற்கு மத்திய அரசு சொல்லும் காரணமெல்லாம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

\This is for the reason that the Aadhaar number is not linked .. This is horrible .. SDBI. Resolution.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை கொண்டு சேர்ப்பதும், அதை உறுதிப்படுத்துவதும் அந்த நாட்டின் ஆளும் அரசின் கடமையாகும். இதற்காக மனித வளங்களை பயன்படுத்தி கடைகோடி குடிமகனுக்கும் உணவு சென்று சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை இதற்கு முற்றிலும் மாற்றமானது.  3 கோடி ரேஷன் அட்டையை ரத்து செய்த நடவடிக்கையை எந்த தாமதமின்றி உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios