சீமான் என்னும் ஆளுமை என்கிற புத்தகம் எழுதி அவரது புகழை பரப்பிய பேராசிரியர் ஆ.அருளினியன் மாபெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஒரு வீடியோ வெளியிட்டுள்ள அவர், தாங்கள் சீமானை பெரிதாக நம்பினோம் .ஆனால் அவர் அப்படி இல்லை. உண்டியலில் பணம் வசூலித்து கட்சி நடத்துகிறோம். ஆனால் சீமான் ஆடம்பரமாக இருக்க ரெட்டிசன் ப்ளூ ஹோட்டலில் ஜிம் வசதியோடு தங்க 14 ஆயிரம் வாடகைக்கு ரூம் கேட்கிறார். கட்சி நடத்த அவரா பணம் தருகிறார்? அல்லது அவரது தாய், தந்தை பணத்தை கொடுத்தாரா? மேடையில் தான் சுடுகாட்டில் படுத்து தூங்கியவன் என பேசுவார். ஆனால் நிஜத்தில் ஆடம்பரமாக தங்க சொகுசு அறைகேட்கிறார் என கொந்தளித்துள்ளார் அருளினியன். 

 

இந்த வீடியோவை மையப்படுத்தி ட்விட்டரில் #சீமான்ணேரூம்போட்டியா என்கிற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.