முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது வாழ்வில் இது மறக்கமுடியாத பிறந்தநாள் என நடிகை கஸ்தூரி காரணம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கேட்டதும் எனக்கு தோன்றுவது- எளிமை. மிக மரியாதையாக, தோழமையுடன் பேசுவார். பொது வாழ்க்கையும் பதவியும் அவரின் அந்த அடிப்படை பண்பை மாற்றவில்லை.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதல்வராக தலைமையேற்ற பொழுது, இரண்டு வாரம் கூட தாக்கு பிடிக்கமாட்டார் என்று பலர் பந்தயம் கட்ட தயாராக இருந்தார்கள். அத்தனை சிக்கல்களை சமாளித்து, பல சோதனைகளை கடந்து, இரண்டு வருட ஆட்சியில் எதிர்க்கட்சியினர் கூட 'அட, பரவாயில்லையே!' என்று வியக்குமளவுக்கு நல்ல பெயரை வாங்குவது சுலபமல்ல. ரத்தம் சிந்தி - உயிரைத் தியாகம்.

 

எல்லாவற்றையும் விட பெரிய சோதனை இப்போது. இந்த கொரோனா காலம் எடப்பாடியாரின் தலைமைக்கு ஒரு அக்னி பரீட்சை. இரண்டு மாதமாக எடுத்த நல்ல பெயரையெல்லாம் இப்பொழுது தக்க வைத்து கொள்வாரா, இல்லை 'தண்ணியில்' கரைத்துவிடுவாரா என்று இதோ இன்று தெரிந்துவிடும். அந்த வகையில், இந்த பிறந்தநாள் எடப்பாடியாரின் மறக்க முடியாத முக்கிய நாள். அவருக்கும் தமிழக மக்களுக்கும் நல்ல நாளாக அமையட்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.