Asianet News TamilAsianet News Tamil

இது திரையுலகை கருப்பு நாட்களாக்கி விட்டது.. முதல்வரை கொண்டாடிய இயக்குனர் பாரதிராஜா.

வணக்கம்.திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றிகள். கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரோனா.

This has turned the cine world into black days .. Director Bharathiraja who celebrated for the CM MKStalin.
Author
Chennai, First Published Aug 23, 2021, 4:18 PM IST

வணக்கம். திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரோனா.  படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது. 

This has turned the cine world into black days .. Director Bharathiraja who celebrated for the CM MKStalin.

நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.  ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.

This has turned the cine world into black days .. Director Bharathiraja who celebrated for the CM MKStalin.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளகள் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.என இயக்குனர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios