ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.48.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிடப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 21 ஆம் தேதி வரை ஒப்பந்த புள்ளியை இறுதி செய்யுமாறு கால அவகாசத்தை பொதுப்பணித்துறை நீட்டித்தது. 

இந்தநிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட 5 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி அல்லது 24ஆம் தேதியில் கட்டுமான பணி பூஜை போடவும் முடிவு செய்திருப்பதாகவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 

அதில், 5 கம்பெனிகளில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான ஒப்பந்தம் 48 கோடிக்கு கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கட்டுமான பணி ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு கெடு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.