இந்த வழக்கை இங்கே விசாரிக்காதீங்க... விசாரிக்கும் நீதிபதியிடமே மனுக் கொடுத்த டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்..!

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஆஜராகி உள்ளார். வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

This case cannot be heard here ... The DGP who filed the petition with the investigating judge. Rajesh Das

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஆஜராகி உள்ளார். வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். This case cannot be heard here ... The DGP who filed the petition with the investigating judge. Rajesh Das

முன்னாள் தமிழ்நாடு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றமும் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்டு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே கடந்த ஜூலை 29ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்.பி. கண்ணன் இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பு ஆஜரானார்கள். அப்போது குற்றப்பத்திரிக்கையில் நகலை ராஜேஷ் தாஸ் பெற்றுக்கொண்டார்.This case cannot be heard here ... The DGP who filed the petition with the investigating judge. Rajesh Das

இதனிடையே, இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் ராஜேஷ் தாஸ். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததது. அப்போது ராஜேஷ் தாஸ் தரப்பில், “காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது. என் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையைத் தமிழ்நாட்டில் இல்லாமல் வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும். எனக்கு எதிரான வழக்கின் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், இன்று ஆஜரான ராஜேஷ் தாஸ் தரப்பில் இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios