திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அமமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் அதிமுக சார்பில் நேர்காணல் வைக்கப்பட்டது. வேட்பாளர் பெயரை அக்கட்சி அறிவிக்கவில்லை.

இதே போல் பாஜக எந்தவித ரிஆக்சனும் காட்டவில்லை. தேர்தலில் நிற்கப் போகிறோமா ? இல்லையா என்பதைக்  கூட அவர்கள் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திருவாரூரில் இடைத் தேர்தல் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் என முன்கூட்டியே அறிந்ததைப் போல் பேசியிருந்தார்.

இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் நடத்த வேண்டாம் என கருத்து கேட்புக் கூட்டத்தில் தெரிவித்ததால் இடைத் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது தமிழிசை சொன்னது அப்படியே நடந்துள்ளது. ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு போன்றவற்றில் என்ன நடக்கும் என்பதை ஆருடம் சொல்வது போல் தமிழசை சொன்னது சரியாக நடந்தது. தற்போதும் அவர் சொன்னது நடந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, ஒரு கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் என தான் தெவித்திருந்தது தற்போது நடந்துள்ளது என்றும், இந்த தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து டாக்டர் தமிழிசை சொன்னது அப்படியே நடப்பதால் இன்னும் அவர் கட்சியில் சரியான வெயிட்டுடன் தான் உள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.