திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அமமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் அதிமுக சார்பில் நேர்காணல் வைக்கப்பட்டது.  வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

இதே போல் பாஜக எந்தவித ரிஆக்சனும் காட்டவில்லை. தேர்தலில் நிற்கப் போகிறேமா ? இல்லையா என்பது கூட அவர்கள் அறிவிக்கவில்லை. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் நடத்த வேண்டாம் என கருத்து தெரிவித்ததையடுத்து தேர்தலை ரத்து செய்வதாக தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் எந்தவித பரபரப்பும் இன்றி இருக்கும்போதே  கண்டிப்பாக தேர்தல் ரத்து செய்யப்படும் என அனைவருக்கும் தெரியும் என கிண்டல் செய்துள்ளார்.