Asianet News TamilAsianet News Tamil

ரத்தாகிறது திருவாரூர் இடைத்தேர்தல்...? அலறும் அரசியல் கட்சிகள்...!

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்ததாவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Thiruvarur by-election cancel
Author
Tamil Nadu, First Published Jan 5, 2019, 2:56 PM IST

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்ததாவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவாரூர் தொகுதியில் வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. ஆனால் அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. Thiruvarur by-election cancel

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது குறித்த அறிக்கையை இன்று மாலைக்குள் அளிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். Thiruvarur by-election cancel

இதனையடுத்து இன்று அனைத்து கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. நிவாரண பணிகள் முடிவடைந்த பிறகு இடைத்தேர்தல் நடத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். Thiruvarur by-election cancel

மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்த பிறகு தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. ஆகையால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios