திருப்பரங்குன்றத்தில் வெயிலில் வாக்கு வேட்டை நடத்தும் வேட்பாளர்கள் முக்கால் வாசி பேருக்கு இங்கு ஓட்டே இல்லாமல் இருக்கிறது. 

திருப்பரங்குன்ற தொகுதியை பொறுத்த வரை அ.தி.மு.க சார்பில் முனியாண்டியும், அ.ம.மு.க சார்பில் மகேந்திரனும், தி.மு.க சார்பில் டாக்டர்.சரவணனும், மக்கள்நீதி மையத்தில் சகதிவேலும்,நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரேவதியும் இவர்களுடன் 19- சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள்.

இவர்களில் சரவணன் மதுரை நரிமேட்டிலும், ம.நீ.மை சக்திவேலுக்கு ஆனையூரிலும், அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரனுக்கு உசிலம்பட்டியிலும் உள்ளது. ஆகவே, திருப்பரங்குன்ற தொகுதியில் போட்டியிடும் இவ்வேட்பாளர்கள் வாக்களிக்க முடியாது. 

ஆனால் அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டி,நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரேவதிக்கு இங்கு ஓட்டு உள்ளது. இதனால்தான் ஆளும்கட்சியும்,நாம் தமிழர் கட்சியும் தனது பிரச்சாரத்தில் மற்ற கட்சியினர் வெளி இடங்களில் இருந்து இறக்குமதி செய்து பிரசாரம் செய்கிறார்கள் அவர்களை நம்ப வேண்டாம் என பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.