திருப்பரங்குன்ற தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 19-ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி ஓட்டப்பிடாராம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வாக்கு பதிவானது நடைபெற இருக்கிறது. 

மற்ற தொகுதிகளை போல இல்லாமல் திருப்பரங்குன்ற தொகுதிக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வெற்றிக்காக ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். அதற்காக தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க மற்றும் இவர்களுடைய கூட்டணி கட்சியிலுள்ள நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க திருப்பரங்குன்றத்திற்கு வந்து குவிவதால் மக்கள் நெரிசலோடு சேர்த்து வாகன நெரிசலும் ஏற்படுகிறது. 

திருப்பரங்குன்ற முக்கிய வீதிகளில் கட்சியினருடை கார்கள் அங்காங்கே நிறுத்தி ஆக்கிரமித்து கொள்கிறார்கள். இதை பொது மக்கள் கேட்டால் கூட வேட்டியை மடித்துக்கட்டி சண்டைக்கு வருகிறார்கள். இதனால் எங்க சாபமெல்லாம் உங்களை சும்மா விடாது என அரசியல்வாதிகள் காதில் விழாதவாறு முணுமுணுக்கிறார்கள் திருப்பரங்குன்றத்து மக்கள்.