Asianet News TamilAsianet News Tamil

போதையில் கலாட்டா செய்த காங். திருநாவுக்கரசர் மகன் மீது வழக்கு - பிரமுகரின் பிள்ளை என்பதால் விடுதலை

thirunavukkrasar son-arrested
Author
First Published Dec 19, 2016, 4:46 PM IST


காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மகன் தனது நண்பர்களுடன் போதையில் கலாட்டாவில் ஈடுபட்டார். இது பற்றி கேட்ட இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.

 காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் அண்ணா நகர் சாந்திக்காலனியில் வசித்து வருகிறார். இவருக்கு ராமசந்திரன் , விஷ்ணு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

 

இரண்டாவது மகன்  விஷ்ணு இவர் நேற்று மாலை தனது நண்பர்கள்  ரோகன்,  யஷ்வந்த் , ராஜேஷ்   ஆகியோருடன்  சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதும் தலைகால் புரியவில்லை . இதனால் தனது நண்பர்கள் சகிதமாக இரவு அண்ணா நகர் 2 அவின்யூக்கு சென்றுள்ளனர். 

பின்னர் அங்கு நின்று கொண்டு போவோர் வருவோரை தாக்கியுள்ளனர், பெண்களை கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் அவசர போலீசுக்கு போன் செய்து புகார் அளித்தனர். இதயடுத்து புகார் திருமங்கலம் காவல் நிலையத்துக்கு அனுப்பபட்டது. 

thirunavukkrasar son-arrested

திருமங்கலம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் நட்ராஜன்   சரக்கடித்து கிண்டல் நடராஜன் கேட்டபோது அவரை தாக்கப்பாய்ந்துள்ளனர். அவரையும் முறைத்துள்ளனர். எங்கப்பா யாரு தெரியுமா ? இப்ப எங்க ஸ்டேட்டஸ் தெரியுமா ? என்றெல்லாம் பேசி முறைத்துள்ளார். உடன் மூன்று நண்பர்களும் போலீசாரை முறைத்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர்  அவர்கள் மீது பிரிவு 75 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமினில் அனுப்பி வைத்தனர் . பெரிய தலைவரின் மகன் என்பதால் மது குடித்த சான்றிதழ் பெறாமல் அனுப்பி வைத்ததாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

பெரிய தலைவர் மகன் என்ற மமதையில் திருநாவுக்கரசர் மகன் தகறாரில் ஈடுபட்டு கைதானது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios