thirunavukkrarasar pressmeet about president candidate

குடியரசு தலைவர் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரிப்பது என்பது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள கட்சியை கைவிட்டுவிட்டதாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எண்ணூர் துறைமுகம் தனியாருக்கு தாரைவாரக்க எடுக்கப்படும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை அதிமுக இரு அணிகளும் ஆதரிப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள கட்சியை கைவிட்டு விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாஜக அரசு, அதிமுக அணிகளிடம் தொலைபேசியில் கேட்டதற்கே ஆதரவு தெரிவித்திருப்பது எவ்வளவு அழுத்தம் தருகிறது என்பதை உணர முடிகிறது என்று கூறினார்.

சென்னை, எழும்பூர் துறைமுகம் தனியாருக்கு தாரைவார்க்க எடுக்கப்படும் மத்திய அரசின் முயற்சி கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரவித்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்ந்தெடுத்த குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் வேட்பாளர் மீரா குமாருக்கு திமுக தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதாக கூறினார். திமுக-காங்கிரஸ் கூட்டணி அவரைத்தான் ஆதரிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

காங். குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். 

டிடிவி தினகரனிடம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கேட்கப்படுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்துக்களில் மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், தினகரன் தெரிவித்ததாக தெரியவில்லை. அவர் கருத்து தெரிவித்தால் அதன் பிறகு அதை பற்றி முடிவு எடுக்கப்படும என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.