thirunavukkarasar met chidambaram

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து தான் கடிதம் கொடுத்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து திருநாவுக்கரசர் தலைவராக்கப்பட்டார்.

திருநாவுக்கரசர் தலைமையேற்றபிறகு இளங்கோவனின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பனிப்போர் நடந்துவந்தது.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். 

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், மரியாதை நிமித்தமாக சிதம்பரத்தை சந்தித்ததாகவும் தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து அவருடன் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி வேண்டாம் என தான் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக வந்த தகவல் பொய் எனவும் தெரிவித்தார்.