நடிகர் கமல் ஹாசன், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் நல்லது என்றும் ஆனால், அவர் தனி கட்சி தொடங்கவே வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழக அமைச்சர்களின் எதிர்ப்புகளுக்கு ஆளானார்.

இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும் கூறியிருந்தனர். இந்த வார்த்தைப்போர்கள் ஓய்ந்தபாடு இல்லை என்றே கூறலாம். 

இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கமல், தமிழகத்தில் தற்போது மக்கள் நல்ல நிர்வாகிகளைத் தேட வேண்டுமே தவிர, நல்ல தலைவர்களை அலல என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் பவளவிழா வரும் 10 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொள்ள உள்ளார். அப்போது கமல் தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் கமல் ஹாசன், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நல்லது என்று கூறியுள்ளார். மேலும், கமல், தனி கட்சி தொடங்கவே வாய்ப்புள்ளதாகவும் அவர் த