தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்களிப்பது, அதிமுக அணிகள் இணைப்பதற்கு மத்திய அரசு அளிக்கும் ஆறுதல் பரிசு என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை, எழும்பூரில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக பல்வேறு குழப்பமான கருத்துக்களை மத்திய - மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன என்றார்.

நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தாமதமாக அறிவித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அணிகளாக பிரிந்துள்ள அதிமுகவை இணைப்பதற்கு மத்திய அரசு அளிக்கும் ஆறுதல் பரிசு இது என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.