திருநாவுக்கரசரை தூக்க திட்டமா? தமிழக காங்கிரஸில் பரபரப்பு…

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நீக்கப்படுவார் என்று வெளியாகியுள்ள தகவலால் தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே அதிமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து நாளை சென்னையில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருநாவுக்கரசர் தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே திருநாவுக்கரசர் மீது கடுப்பில் உள்ள திமுகவும் திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர்.

அப்போது ஸ்டாலின் அவர்களிடம் திருநாவுக்கரசர் தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற பல காரணங்களால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.