Asianet News TamilAsianet News Tamil

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. வாரிசுகள் அரசியலுக்கு சப்போர்ட் செய்யும் திருநாவுக்கரசர்..!

வாரிசுகள் அரசியலுக்கு வருவது பாவமல்ல. திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஊரக தேர்தல் போல் நகர்புற தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்றென்றும் தொடரும் என்றும் அப்போது திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Thirunavukarasar who supports succession politics
Author
Sivaganga, First Published Oct 25, 2021, 12:09 PM IST

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால், கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். 

Thirunavukarasar who supports succession politics

இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்;- மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. ஜனநாயக நாட்டில் இது இயல்பு தான். வாரிசுகள் அரசியலுக்கு வருவது பாவமல்ல. திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஊரக தேர்தல் போல் நகர்புற தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்றென்றும் தொடரும் என்றும் அப்போது திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Thirunavukarasar who supports succession politics

மேலும், மத்திய அரசுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் சுமையை அதிகரிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 50 காசு, ரூ.1 உயர்த்திய போதெல்லாம் போராடியவர்கள், தற்போது தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்கின்றனர் என திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios