தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் கிடைக்காதது இரட்டைத் தலைமையால்தான் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

எந்த நேரத்தில் வாய்திறந்தாரோ மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, அப்போதிலிருந்தே ஆளும் ஆளும்கட்சியினரே நெட்டிசன் ரேஞ்சிக்கு இறங்கி கலாய்த்து வருகின்றனர். கட்சிப்பொதுக்குழுவை உடனே கூட்டி கட்சிக்கு ஒற்றை தலைமை அதாவது அதிகாரமுள்ள பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சொன்னதை வைத்து அதிமுக குற்றத்தில் மட்டுமல்ல தமிழக அரசியலில் விவாதமாக மாறியிருக்கிறது.

ஒற்றை தலைமை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தனது தாய்க்கழகமான அதிமுகவை கலாய்த்து தள்ளியுள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றாலும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை இல்லாததால்தான், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

மாநிலக் கட்சியோ, தேசியக் கட்சியோ எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒருவர் தலைமையேற்றால்தான் அக்கட்சி முறையாக, சிறப்பாகச் செயல்பட முடியும். இரண்டு பேரோ, மூன்று பேரோ, அல்லது குழுக்களோ, அவர்கள் ஒன்றாக கலந்து பேசலாம். ஆலோசிக்கலாம் ஆனால் முடிவு என்பது வேறு. அனைவருடனும் கலந்துரையாடலாம், கருத்துக் கேட்கலாம் ஆனால் முடிவை ஒருவர் மட்டுமே எடுக்க வேண்டும்.

அதிமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தார்கள். அந்த கூட்டணி சார்பில் ஒருவர் வெற்றியும் பெற்றுள்ளார். தமிழகத்துக்கு ஓர் அமைச்சர் பதவியைத் தரவும் தயாராக இருந்தார் மோடி. ஆனால் இரட்டை தலைமையோடு அதிமுக இயங்கி வருவதால் 2 பிரிவினரும் பிரிவுக்கு ஒன்று என 2 அமைச்சர்களை கேட்டு இருக்கலாம். ஆனால் மோடி ஒரு அமைச்சர் பதவி தான் தருவதாகக் சொன்னதால் யாருக்குமே கிடைக்க வாய்ப்பு இல்லை. 

தமிழகத்துக்கு ஒரு அமைச்சர் கிடைப்பதற்கான வாய்ப்பு இரட்டைத் தலைமையால் அது இல்லாமல் போய்விட்டது. அதேபோல 3 மாநிலங்களவை எம்.பி. பதவியை 30 பேர் கேட்கிறார்கள். இரட்டைத் தலைமையில் சீட்டா குலுக்கிப் போட்டு பார்க்க முடியும்? என செம்ம கலாய் கலாய்த்துள்ளார். ராஜன் செல்லப்பா ஆரம்பித்து வைத்த இந்த இரட்டை தலைமை மேட்டர் நெட்டிசன்கள் மட்டுமல்ல அரசியல் தலைவர்களே கலாய்த்து வருகின்றனர்.