Thirunavakaran sudden wish Rajinikanth must start own party

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், ராஜீவ்காந்தியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறுகையில், " தமிழகத்தில் பல கல்வித் திட்டங்களுக்கு வித்திட்டவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. அதிமுகவின் இரு அணிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசியலில் பின்வாசல் வழியாக வர பா.ஜ.க. முயற்சிக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் தேசிய கட்சிகளுடன் இணையாமல் தேசியக் கட்சிகளுடன் சேராமல், நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். " இவ்வாறு அவர் கூறினார்.