அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுகரசர் சசிகலா தரப்புக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், திருநாவுகரசர் கூறிவரும் மாறுபட்ட கருத்தால் திமுகவினர் கடுப்பில் உள்ளதாக தெரிகிறது.

அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில் தொடர்ந்து சசிகலா தரப்பிற்கு ஆதரவாக திருநாவுகரசர் கருத்து தெரிவித்து வந்தார். திருநாவுகரசர் தலைவராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா விவகாரத்தில் அவரது மருத்துவ அறிக்கையை திமுக கேட்டபோது அதற்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

இதேபோன்று பல விவகாரங்களில் திருநாவுகரசர் காங்கிரசில் தான் இருக்கிறாரா என்று சந்தேகப்படும் அளவிற்கு நடவடிக்கைகள் அமைந்தன. குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடராஜன் தரப்புக்கு ஆதரவாக திருநாவுகரசர் அடிக்கடி கருத்து கூறி வந்தார்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் சசிகலா அணி என இரண்டாக பிளவு பட சசிகலா அணிக்கு ஆதரவாக திருநாவுகரசர் முயற்சி எடுத்தார்.

இதற்காக டெல்லி சென்ற திருநாவுகரசர் ஓ.பி.எஸ் அணியை பா.ஜ.க ஆதரிக்கிறது. ஆகவே நாம் சசிகலா அணியை ஆதரிப்போம் என்று ராகுலிடம் கூறினாராம்.

ஆனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் சசிகலா அணிக்கு எதிராக உள்ளனர். திமுகவும் எதிர்ப்பு நிலை எடுத்துள்ளது.

இந்த நிலையில் நாம் அதிமுகவில் ஒரு அணியை ஆதரித்தால் பொதுமக்களின் எதிர்ப்புக்கு ஆளாவோம். திமுகவுடனான கூட்டணியும் முறியும் என்று ராகுலிடம் கூறியதாக தெரிகிறது.

இதை கேட்ட கடுப்பான ராகுல் ஒழுங்காக திமுக எடுக்கும் நிலைப்பாட்டின்படி நடங்க, உங்க இஷ்டத்துக்கு எதுவும் செய்யகூடாது என்று கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல் சென்னை வந்த பிறகும் மாறுபட்ட கருத்தை கூறிகொண்டிருந்தார்.

திருநாவுக்கரசரின் இந்த குழப்பமான சூழ்நிலை திமுகவினரை கடுப்படைய செய்கிறதாம்.