இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபட்சவின் வெற்றி தமிழர்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என திருமுருகன் காந்தி கூறியுள்ளார். 

நேற்று தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் பேட்டியளித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இலங்கையில் தமிழினத்தைப் படுகொலை செய்து, அழித்த மகிந்த ராஜபட்சவும், கோத்தபய ராஜபட்சவும் அதிகாரத்துக்கு வந்துள்ளனா். இது, தமிழர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகாரக் கூட்டணியாக அமைந்துள்ளது. 

தமிழின உரிமைக்கான முயற்சியை சர்வதேச அளவிலும், உலக நாடுகள் மட்டத்திலும் மத்திய அரசு எடுக்காததன் விளைவுதான் இப்போது ராஜபட்ச சகோதரா்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளனர். சா்வதேச போர் குற்றவாளிகளாக இருக்கக்கூடிய ராஜபட்ச சகோதரர்கள் எப்படி அதிகாரத்துக்கு வந்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. 

சர்வதேசத்தின் உதவி இல்லாமல் இவர்கள் அதிகாரத்துக்கு வந்திருக்க முடியாது. இந்த நிலைமை மிக மோசமானது. தமிழீழ தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஆபத்தான கூட்டணியாகவே நாங்கள் இதை பார்க்கிறோம் என தெவித்துள்ளார். அதிபராக இருந்த ராஜபட்சவின் கடந்த கால ஆட்சியில் தமிழக மீனவா்கள் கடுமையாக தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.