மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜாமினில் இன்று விடுவிக்கப்பட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றதாலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கேட்டு போராடியதாலும், சீர்காழியில் பெரியார் பிறந்தநாள் கூட்டத்தில் போராட்டத்தை தூண்டும் வகையில் திருமுருகன் காந்தி மீது 15 வழக்குகள் போடப்பட்டது. 

தூத்துக்கு துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு திரும்பிய திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அவரது விடுதலைக்காக அமெரிக்கா வாழ் தமிழர்கள் சான் பிரான்சிஸ்கோவில் போராட்டம் நடத்தப்பட்டது.

 

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலூரில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் திருமுருகன் காந்தி. சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன் காந்தியை காவலர் ஒருவர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். 

ஆனால், அன்றைய தினமே திருமுருகன் காந்தியை மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி சிறைக்காலவர்கள் மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், திருமுருகன் காந்தி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில், தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வேலூர் சிறையில் இருந்து திருமுருகன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும், திருமுருகன் காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.