அறிவாலயமாக இருந்தாலும், சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் அந்த நிலம் பஞ்சமி நிலமா என்பதை கண்டறிய முதலமச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ’ஏழு தமிழர் விடுதலையை ஆளுநர் நிராகரித்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானதா என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். 

ஒருவேளை ஆளுநர் நிராகரித்தால், தமிழக அரசு மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு ஆதரவாக அதிமுக கருத்து தெரிவித்து வருகிறது. சிறுபான்மையினர் குறித்து ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பா.ஜகவுடையது. தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிய முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவாலயமாக இருந்தாலும், சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் அந்த இடம் பஞ்சமி நிலமா? என்பதை கண்டறிய வேண்டும்’’எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

திமுக தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இத்தனைக்கும் திருமாவளவன் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆழமாக பார்த்தால் அசுரன் படத்தில் பஞ்சமி நிலத்தைபெற போராடும் தனுஷை பற்றியும், அந்தப்படத்தை இயக்கிய வெற்றிமாறனை பற்றியும் பாராட்டி இருந்தார் மு.க.ஸ்டாலின். இதற்கு பதிலளித்திருந்த ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் அதை ஒப்படைக்க வேண்டும் என பற்ற வைத்தார். அந்த விவகாரம் இப்போது தமிழக அரசியலில் பற்றி எரிகிறது. 

இதனையடுத்து பட்டாவுடன் முரசொலி அலுவலகம் இருந்த இடத்தை பற்றிய விவரங்களை வெளியிட்டு இருந்தார் ஸ்டாலின். அவர் 1985ம் ஆண்டு பதியப்பட்ட பாட்டா என்றும் மூலப்பத்திரத்தையும் கேட்டு வருகிறார் ராமதாஸ். இந்நிலையில் அறிவாலயமாக இருந்தாலும் அது பஞ்சமி நிலமா என்பதை கண்டறிய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளது உற்று நோக்கப்படுகிறது.