சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கவில்லை. தடுக்கி விழுந்தால் போட போராடக் கிளம்பும் எதிர்கட்சிகள் இந்த சம்பவம் தொடர்பாக வாய்திறக்கவில்லை. 


ஆனால் தமிழகத்தில் திமுக மட்டும் இந்த கொலையை யார் செய்தாலும் நடவடிக்கி எடுக்க வேண்டும் என பட்டும் படாலும் தெரிவித்து போனார். வில்சன் உடலுக்கு அஞ்சலி, மரியாதை செலுத்த வரவில்லை. எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

பக்கத்து வீட்டில் பல்பு எறியாவிட்டாலும் குரல் கொடுக்கும் சீமான், திருமாமளவன், வைரமுத்து, வீரமணி என யாரும் குரல் எழுப்பாமல் போனது ஏன்? 
இதுகுறிதுத்து சாரதி கிறீஷ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’வில்சனை கொன்றவர்கள் பிடிபடும் வரையாவது தேசம் காத்திட இவரைப் பற்றி பேசுங்களேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்தது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டதால் இப்படி அவர்கள் வாய் திறக்காமல் இருக்கிறார்களா? திமுக கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டாலும், அவர்களை விட இஸ்லாமியர்களின் வாக்குவங்கி அதிகம். இதேவேளை கொலை செய்தவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் ஸ்டாலின், திருமா, வீரமணி போன்றவர்கள் தமிழகத்தை அமளிதுமளியாக்கி ரணகளப்படுத்தி இருப்பார்கள். 

இது எந்தவிதமான நடுநிலை என்பது தெரியவில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரி நியாயமாக நடந்து கொள்வது தான் சமூகநீதி. திமுக- திருமாவளவனின் இதுபோன்ற நிலைப்பாட்டை இஸ்லாமியர்களே ஏற்பார்களா என்பது சந்தேகமே. நடுநிலைமையாக இல்லை. ஓட்டுக்காக நடுநிலை தவறும் அரசியல்வாதிகள் தங்களது நிலைப்பாட்டை சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என ஆதங்கப்படுகிறார்கள் பொதுமக்கள்.