தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடந்தது போல தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் நடத்தப்படவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி விட்டு மத்திய அரசு தற்போது திணறி வருவதாகவும், மக்களின் எதிர்ப்பை கருத்தில்கொண்டு அவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு அடி பணிய வேண்டும் என்றார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடந்தது வரவேற்கத்தக்கது என்ற அவர், இது தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றார். தமிழகத்தின் அனைத்து கோவிலிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார். தமிழகத்தில் 5 மற்றும் 8 ம் வகுப்புக்குக்கான பொதுத்தேர்வு ரத்தை வரவேற்ற திருமாவளவன், அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்ததாலேயே இது சாத்தியமாகி இருக்கிறது என்றார்.

மேலும் தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வரும்போதும் இதே நிலைப்பாட்டில் தமிழக அரசு நிலையாக இருக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் பின்வாங்கக்கூடாது எனவும் தெரிவித்தார். அதற்கான உறுதியையும் அரசு அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

'வாடா.. செருப்பை கழட்டுடா..! சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...!