மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியை இறுதி செய்வதற்கான பணிகளில் திமுக மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொமதேக ஆகியவை திமுக கூட்டணியில் இணைந்து அக்கட்சிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்,  விசிகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்பு கட்சி நிர்வாகிகளிடையே பேசிய திருமாவ கூறியதாவது; இன்றைய அரசியல் சூழ்நிலையில் நம் கட்சித் தொண்டர்கள் யாருமே அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப  வலைத்தளங்களில் அவரவருக்குத் தோன்றும் கருத்துகளைப் பதிவிடக் கூடாது. என்றும் கட்சி தலைமைக்கு அனைவரும் கட்டுப்பட்டு ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். மனதில் தோன்றியதை எல்லாம்  வலைத்தளங்களில்  கவன ஈர்ப்புக்காக எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்று யாரும் அந்த மாதிரி செயல்களில் ஈடுபடக்கூடாது. 

ஒருவேளை அப்படி செயல்பட்டால் கட்சித் தலைமை மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். அதனால் அந்த மாதிரி தான்தோன்றித்தனமாக செயல்களை செய்யக் கூடாது. தேர்தல் வரட்டும் அந்த நேரத்தில் நாம் பேரம் பேசலாம் என்று இருக்கக் கூடியக் கட்சி நம் கட்சி அல்ல. பணத்துக்காகவும் பதவிக்காகவும் கூட்டணி வைக்கின்ற கட்சி விடுதலை சிறுத்தைக் கட்சி இல்லை. 

ஒரு கொள்கைக்காகவும் சமூக நலனுக்காகவும் கூட்டணி வைக்கின்ற கட்சிதான் விசிக அகில இந்திய அளவில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகள் இருந்தால் அந்த கூட்டணியில் விசிக இருக்காது என்று மிக தைரியமாக சொல்லக் கூடிய கட்சி நமது விசிக. இப்படி கூறுவதால் பயனில்லாமல் போகலாம், இதனால் பாதிப்புகள் வரலாம். இதனால் பின்னடைவுகள்  வரலாம், இறுதியில் வெற்றி அடையப்போவது விசிக தான் என தொண்டர்களிடம் காட்டமாகவே விவரித்துள்ளார்.