தமிழர்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் மோடி பேசியே ஆட்சியை தூக்கி இருப்பார்..! 

தமிழர்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் மோடி பேசி பேசியே தமிழகத்தில் ஆட்சியை  தூக்கி இருப்பார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்து உள்ளார். 

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் பேசியதாவது, நாம் எல்லோரும் இந்தி பேசுபவர்களாக இருந்திருந்தால், தமிழ்நாட்டில் அவர் இரண்டே இரண்டு பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தாலே போதும் தமிழகத்தி வீழ்த்தி இருப்பார். நல்ல வேலை நமக்கு இந்தி தெரியாததால், அவருடைய வாய் ஜம்பம் தமிழ்நாட்டில் பலிக்க வில்லை. 

அவர் தமிழ் கற்று என்றைக்கு நம்மிடத்தில் வந்து தமிழில் பேசி மயக்க போகிறார்? தமிழ்நாட்டில் மோடி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் தமிழகத்தின் தனித்துவம் தான்.. தமிழ் காப்பாற்றப்பட்டது தான்... இந்தி தடுக்கப்பட்டது தான்...நம்முடைய அடையாளம் பாதுகாக்கப்பட்டது தான்..

இல்லை என்றால் ஒரு பொதுக்கூட்டம் போதும், மோடி தமிழகம் வந்து ஒரு மணி நேரம் கையை காலை அசைத்து அந்த இந்தியில் பேசி இருந்தால் தமிழ் நாட்டு மக்கள் வாய் பிளந்து பார்த்து இருப்பார்கள்.திருமாவளவனின்  இந்த பேச்சு கூட்டடத்தில் இருந்தவர்களை அதிர்ச்சி செய்துள்ளது.