Asianet News TamilAsianet News Tamil

நான் ஸ்டாலின் கையை பிடிச்சா, ராமதாஸுக்கு ஏன் கோபம் பொத்துக்கிட்டு வருது..? திகுதிகு திருமாவளவன்..!

டாம் அண்டு ஜெர்ரிக்கு இடையில் கூட பிரச்னை தீர்ந்து விடும் போல. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸுக்கும் இடையிலான பிரச்னைகள் மட்டும் தீரவே தீராது போல. 

thirumavalavan slaem ramadoss
Author
Tamil Nadu, First Published May 15, 2019, 3:21 PM IST

டாம் அண்டு ஜெர்ரிக்கு இடையில் கூட பிரச்னை தீர்ந்து விடும் போல. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸுக்கும் இடையிலான பிரச்னைகள் மட்டும் தீரவே தீராது போல. 

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் இறுதி நாட்களில் பொன்பரப்பியில் நடந்த கலவரத்துக்கு திருமாவே காரணம் என்று ராமதாஸ் குற்றம்சாட்டுவதாக திருமா கொதித்திருந்தார். இதைத்தொடர்ந்து டாக்டர் மீது தாறுமாறான விமர்சனங்களை அள்ளி வீசியிருக்கிறார் சிறுத்தைகள் தலைவர். அதில்...”தமிழ்நாட்டுல என்ன பிரச்னை நடந்தாலும் அதற்கு திருமாவளவனே காரணம்-ன்னு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுறதை நினைக்கிறப்ப சிரிப்புதான் வருது. thirumavalavan slaem ramadoss

நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. நான் கூட்டணியில் ஸ்டாலினின் கரம் பற்றி நிற்பதை பார்த்து இவர்களுக்கு மிகப்பெரிய அச்சம் வருகிறது. அதனால்தான் எங்கள் இரு கட்சிகளுக்கும் இடையில் பிரச்னைகளை உருவாக்கிட முயல்கிறார். எங்களை தி.மு.க.விடமிருந்து பிரித்துவிட்டால், அதன் பின் கூட்டணியில் நுழைந்து, எளிதாக தங்களுக்கான விஷயங்களைக் கையாளலாம் என நினைக்கிறார். இதனாலேயே அபாண்ட பழி சுமத்துகிறார்.” என்று வெடித்துள்ளார். thirumavalavan slaem ramadoss

ராமதாஸுக்கு தி.மு.க. கூட்டணி மீது ஆர்வம் அதிகரித்திருக்கிறது எனும் தோரணையில் திருமா சொல்லிவைக்க, அதேவேளையில் தேர்தலுக்கு பிறகு, மக்கள் நலன் சார்ந்த பல விஷயங்களில் மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசுகளை நோக்கி ராமதாஸ் சற்றே கண்டிப்பான குரலில் சில அறிக்கைகளை விட்டிருப்பதும் அதிர வைத்துள்ளது அரசியல் அரங்கை. அப்ப அன்புமணியை கூடிய சீக்கிரமே இன்னொரு பிரஸ்மீட்ல பார்க்கலாமுன்னு சொல்லுங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios