விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் சகோதரி, கொரோனா பாதிப்பால் சென்னையில் சமீபத்தில் உயிரிழந்தார்.

 

சென்னை, மந்தைவெளியில் அவரது உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய சுகாதாரத் துறையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், திருமாவளவன் தரப்பில் பேசி அவரது சொந்த ஊரான, அரியலுார் மாவட்டம், அங்கனுாருக்கு உடலை கொண்டு போக வேண்டும் என ஆளுங்கட்சி மேலிடத்திடம் பேசி இருக்கிறார். 

மேலிடமும் சம்மதிக்க உடலை ஆம்புலன்ஸ் மூலம் அங்கனுார் கொண்டு போய் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்திருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு இப்படி சலுகை தருவார்களா? என சுகாதார துறையிலேயே முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொண்டு, அரும்பணி ஆற்றிவரும் திருமாவளவனுக்கு உற்ற துணையாக, இருந்த ஒரே சகோதரி பானுமதி.