பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட வானதி சீனிவாசன் சென்னை பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு அமர்க்களப்படுத்தப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதிசீனிவாசன்...
 “மிகப்பெரிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு இல்லை சமூகத்தின் பொறுப்பு, குடும்பம் என்பது பெண்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்க கூடிய ஒரு அமைப்பு தற்போது குடும்ப வன்முறைக்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து உள்ளோம்.

சாதாரண பெண்ணுக்கு அரசியல் என்பது கனவு, அந்த வகையில் ஒரு நடுத்தர பெண்ணாக உள்ள எனக்கு தேசிய அளவில் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஆகையால் வாக்காளர்களாக உள்ள பெண்களை அரசியல் ரீதியாக தீவிர பங்கேற்பாளர்களாக மாற்ற தீவிர முயற்சி எடுப்பேன். மனு தர்மத்தை எதிர்த்து அடிப்படையில் போராட வேண்டும் என்றால் திருமாவளவன் அறிவாலயத்தில் தான் போராடம் நடத்த வேண்டும். பிறப்பின் அடிப்படையில் எனக்கு பொறுப்பு அளிக்கவில்லை. திமுகவில் தான் பிறப்பின் அடிப்படையில் இளைஞர் அணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே திருமாவளவன் அறிவாலயத்தில் தான் போராட வேண்டும்”. எனக் கூறினார்.