விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பந்தமாக சில கருத்துக்களை கூறியிருந்தார். அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீமான் பேசியது குறித்து கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய அமைதிப்படை மீதான சீமானின் கோபம் நியாமானது என்றாலும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை கூறுவது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்துவதாக அமையாது என்றார். 

ராஜீவ் காந்தியை கொன்றதாக புலிகள் ஒருபோதும் கூறியதில்லை அவர், இந்திய அரசையோ காங்கிரசையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விமர்சனம் செய்ததில்லை என்றார். மேலும் இந்திய அரசை பகைத்துக்கொள்ளாத அணுகுமுறையை தான் பிரபாகரன் பின்பற்றியதாக திருமளவாளன் குறிப்பிட்டார்.