நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டி என திருமாவளவன் தெரிவித்திருப்பது ஆந்திராவில். ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் ‘தேசம் காப்போம்’ மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆந்திரா சென்றிருந்தார் திருமாவளவன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்.

 

செய்தியாளர்களிம் அவர் கூறும்போது, “ஆந்திராவில் சில தொகுதிகளில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் விசிக போட்டியிட ஏற்பாடுகள் செய்யப்படுட்வருகின்றன. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து ஏற்படும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.” என்று தெரிவித்தார்.