சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன், விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள்  நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் 2014ல் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் ஆரம்பித்த உடன்,  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் மற்றும் கவிஞர் இளந்தேவன் ஆகியோர் இணைந்தனர். அடுத்து கடந்த 2019ல்  எஸ்.கே.கிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார்.