பாஜக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கசப்பு மருந்துதான்.  பாஜக கொண்டுவருகின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்று கண்ணைமூடிக்கொண்டு  விமர்சனம் செய்யத்தொடங்கிவிடுவார் திருமாவளவன், இதுமட்டுமின்றி திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் கூட்டணிபோட்டு  பாஜகவையும், பாஜக தலைவர்களையும் வறுத்தெடுப்பதில் வல்லவர் திருமாவளவன்.

அமித்ஷாவைத்தான் நான் நம்பியிருக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடியாக தெரிவித்துள்ளார், அவரின் கருத்தால் ஸ்டாலின், வைகோ. கே.எஸ். அழகிரி உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாஜக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கசப்பு மருந்துதான். பாஜக கொண்டுவருகின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்று கண்ணைமூடிக்கொண்டு விமர்சனம் செய்யத்தொடங்கிவிடுவார் திருமாவளவன், இதுமட்டுமின்றி திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் கூட்டணிபோட்டு பாஜகவையும், பாஜக தலைவர்களையும் வறுத்தெடுப்பதில் வல்லவர் திருமாவளவன். பாஜகவுடன், விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு அப்படி ஒரு பரமவிரோதம் என்பதை உலகமே அறியும். 

அப்படிப்பட்ட திருமாவளவன், தான் நாடாளுமன்ற உறுப்பினரான பின்பு , இராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை அழைத்துச்சென்று அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்து வந்துள்ளார் திருமாவளவன், இந்நிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்ல முடிவு எடுப்பார் என்றும் , அதற்காக அமித்ஷாவைத்தான் நான் நம்பியிருக்கிறேன் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஏழு தமிழர் விடுதலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த தியாகத்தையும் செய்யும் என்று திருமாவளவன் சொல்லிவந்த நிலையில் அவர் தற்போது அமித்ஷாவே தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்தால் கூட்டணி கட்சித்தலைவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.