திமுக கூட்டணியை விட்டு திருமாவை வெளியே அழைத்த ராமதாஸ்... அம்பலமாகும் ரகசியங்கள்..!
திருமாவளவனும், ராமதாஸும் தங்களுக்குள் நடந்த பல விஷயங்களை அரசியலில் எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் நிலையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருமாவளவனும், ராமதாஸும் தங்களுக்குள் நடந்த பல விஷயங்களை அரசியலில் எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் நிலையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருமாவளவனை தலைவராக்கியதே நான்தான்.. அவருக்கு அரசியல் முகவரி கொடுத்ததே நான் தான். அவரது தொண்டர்களை வேறு மாதிரி தயார்படுத்தியிருந்தார். அவர் மாறவே இல்லை" என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதற்கு விளக்கமளித்துள்ளார் திருமாவளவன்.
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், "டாக்டர் ராமதாஸ் என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்தார். வாழை இலையில் சாப்பாடு பரிமாறினார். அப்போது, 'திமுக ஒரு துரோக கட்சி. அது அழிந்து போகக் கூடியது. அதனால் அங்கிருந்து வெளியே வந்துவிடு' என்று என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் அதை உதாசீனப்படுத்தினேன். அன்னையில இருந்து என் மீது சேற்றை வாரி இறைக்கிறதும், வீண் பழி போடறதுமே அவர் வேலை. ஆனால் நான் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் திறந்த புத்தகமாக இருக்கிறேன். நான் சொல்றது எதுவும் பொய் கிடையாது. வேண்டுமானால் ஒரே மேடையில் ராமதாசை சந்திக்கவும் நான் தயார்.
திமுகவில் சீட்டு மட்டுமே கிடைக்கும். ஆனா நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி பேரம் பேசி பாமக கூட்டணி அமைத்துள்ளது. உண்மையை சொல்ல போனால், அதிமுக - பாமக கூட்டணிதான் வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி. என்னை சாதியைச் சொல்லி மட்டுமே குற்றம் சுமத்த முடியும் வேறு எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது’’ என அவர் தெரிவித்தார்.