Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணிக்கு எதிராக நெஞ்சுரத்துடன் துடிக்கும் திருமாவளவன்... கொடியால் வந்த வெடி..!

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே போரட்டம் நடத்துகிறோம் என்றால் அதற்கு நெஞ்சுரம் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Thirumavalavan beats with courage against the DMK alliance ... the explosion that came with the flag
Author
Tamil Nadu, First Published Sep 28, 2021, 7:09 PM IST

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே போரட்டம் நடத்துகிறோம் என்றால் அதற்கு நெஞ்சுரம் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டத்தில் விசிக கொடி ஏற்றுவதை தடுத்த காவல்துறையின் தலித் விரோதப்போக்கை கண்டித்து சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற விடாமல் போலீசார் தடுக்கின்றனர். நாங்கள் என்ன சீனாவின் கொடியை இங்கு வந்து ஏற்றினோமா? பாகிஸ்தான் கொடியை இங்கு ஏற்றினோமா? எங்கள் கட்சியை ஏற்றக்கூடாது என போலீஸார் கடுமை காட்டியது எதனால்..? எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளபோது அதில் கவனம் செலுத்தாமல் இந்த கொடியேற்றும் விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு செயல்பட்டுள்ளது காவல்துறை. வேறு எந்த சமூகத்தை சார்ந்தவர்களும் கொடியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எத்தனையோ சமூகத்தை சார்ந்தவர்கள் அங்கு வசித்தும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. Thirumavalavan beats with courage against the DMK alliance ... the explosion that came with the flag

அப்படி இருந்தும் காவல்துறை கொடியை ஏற்றவிடாமல் தடுத்துள்ளது. இந்த கொடியேற்றப்படும் பகுதி தலித் சமூதாயத்தை சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதி. அவர்கள் விளையாடும் பகுதி. 1990ல் மதுரையில் இருந்தேன். அப்போது கொடியேற்ற செல்லும் போது, நமது கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் என பெயர் வைத்ததால், இவன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளன், நக்சலைட்டு ஆதரவாளன் என்றெல்லாம் போலீசார் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். அப்போது கணேசன் என்கிற போலீஸ் அதிகாரி அங்கு பணியாற்றி வந்தார். அவர் ஒரு பிராமணர். அவர் சொன்னாராம், எளிய மக்கள் முன்னேற அவர் ஒரு தலைவராக முன்னேற வேண்டும் என என்னைச் சொல்லி , கடுமை காட்டாதீர்கள் என மற்ற அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.

  Thirumavalavan beats with courage against the DMK alliance ... the explosion that came with the flag

எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது, கட்சி இருக்கிறது, தன்மானம் இருக்கிறது. காவல்துறை ஆளும் கட்சி வசம் இருக்கிறது. இருப்பினும் நாங்களும் கூட்டணி கட்சியில்தான் இருக்கிறோம். கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம் என்றால் அதெற்கென தனியாக துணிச்சல் வேண்டும். அதற்கும் நெஞ்சுரம் வேண்டும். அது எங்களிடம் அதிகமாக இருக்கிறது’’என அவர் தெரிவித்தார். அவரது பேச்சு கூட்டணிக்குள் பிரளயத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios