Asianet News TamilAsianet News Tamil

திருமாவளவா... மோடி வரும்போது பலூன் விடு பார்க்கலாம்... ரவுசு காட்டும் ராதாரவி..!

 நடிகரும், பாஜகவை சார்ந்தவருமான ராதாரவி ஒரு பொது மேடையில், திருமாவளவா... நீ ஒரு நல்ல ஆம்பளையா இருந்தா மோடி வரும்போது 12ம் தேதி பலூன் விடுடா’’ பார்க்கலாம் என சவால் விட்டுள்ளார்.

Thirumavalava ... Are you a good ambalaya? When Modi comes, you can see the balloon leave ... Radharavi showing the sun ..!
Author
Tamil Nadu, First Published Jan 2, 2022, 5:40 PM IST

திமுகவுக்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ ஆண்மை இருந்தால் தமிழகம் வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு கருப்புக் கொடிக் காட்டத் தயாரா? என நடிகர் ராதாரவி சவால் விடுத்துள்ளார்.

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் வகையில் இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் அடுத்த மாதம் 12-ம் தேதி பிரதமர் மோடி விருதுநகரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடியுடன், ஸ்டாலின் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ முதல் அரசு நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.Thirumavalava ... Are you a good ambalaya? When Modi comes, you can see the balloon leave ... Radharavi showing the sun ..!
 
அதேநேரம் அரசியல் ரீதியாக மத்திய பாஜக அரசுடன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவை மோதல் போக்கை கொண்டிருப்பதால் சில சிக்கல்களும் எழுந்துள்ளன.

தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தவரை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #Go Back Modi என்று ட்ரெண்ட் செய்வது வழக்கம். அவர் பயணிக்கும் வழி நெடுக கட்சித் தலைவர்கள் கூடிநின்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களையும் பறக்க விடுவார்கள்.Thirumavalava ... Are you a good ambalaya? When Modi comes, you can see the balloon leave ... Radharavi showing the sun ..!

திமுகவைப் பொறுத்தவரை தற்போது அது மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் மோடியின் வருகைக்கு முன்பு போல எதிர்ப்பு தெரிவிக்காது. அப்படி செய்தால், அது முதலமைச்சர் ஸ்டாலினை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் என்பதால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.

ஆனால் மோடி என்றாலே கொந்தளிக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகளுக்கும், தமிழகத்தில் முந்தைய காலங்களில் மோடி அரசுக்கு எதிராக போராடிய நடிகர்கள் சூர்யா, சித்தார்த் மற்றும் திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி மாதிரியான சமூக போராளிகளுக்கும் இது பெரும் இடியாப்ப சிக்கலாக அமைந்துவிட்டது.

 தமிழக அரசு விழா என்பதால் அதில் கலந்துகொள்ள வரும் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தால் அது திமுக அரசை அவமதிப்பதுபோல் ஆகிவிடும் என்று திமுக கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. அதேநேரம் ஊடகங்கள் வாயிலாக கண்டன அறிக்கை வெளியிடுவதும் சரியாக இருக்காது. அதுவும் திமுக அரசை விமர்ச்சிப்பது போலாகிவிடும்.Thirumavalava ... Are you a good ambalaya? When Modi comes, you can see the balloon leave ... Radharavi showing the sun ..!
 
இதில் மிகவும் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருப்பது காங்கிரஸ்தான். ஏனென்றால் 11 மருத்துவக்கல்லூரிகளின் திறப்பு விழா விருதுநகரில் நடக்கிறது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், எதற்கெடுத்தாலும் மோடியை குற்றம், குறை கூறுபவர். அவரும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விழாவை புறக்கணித்தால், மாவட்ட மக்களுக்கு அவர் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் வரும். இதனால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறார் என்கிறார்கள்.
 
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “பிரதமர் மோடி கடந்த காலங்களில் தமிழகத்தில் அரசு விழாவில் பங்கேற்க வந்தாலும் சரி, தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தாலும் சரி, திமுக, காங்கிரஸ், விசிக மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், போன்ற கட்சியினர் அதை ஜீரணிக்க முடியாமல் கொதித்துப் போய் ஏதாவது ஒரு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, கருப்புக் கொடி காட்டுவதையும், #Go Back Modi என்று ட்ரெண்ட் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்படி மூன்று ஆண்டுகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

இப்போது தமிழக அரசு விழாவில் கலந்துகொண்டு 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க மோடி வருகிறார். இதன் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இனி தமிழக மாணவர்களுக்கு 4277 இடங்கள் கிடைக்கும் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்கிற முழக்கம் இனி தமிழகத்தில் நீர்த்துப்போவதற்கும் வாய்ப்பு அதிகம்.

மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக ராகுல் எதிர்த்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் மோடியின் வருகையின்போது எது மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கிப் போயிருக்கிறது. புலிபோல் பாய்ந்த வைகோவும், சிறுத்தையாக சீறிய திருமாவளவனும் வேல்முருகன், ஈஸ்வரன் போன்றோரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.Thirumavalava ... Are you a good ambalaya? When Modi comes, you can see the balloon leave ... Radharavi showing the sun ..!
 
இந்தக் கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதே கட்டிமுடிக்கப்பட்டவை என்பதாலும், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி அதிமுக என்பதாலும் இந்த விழாவில் பங்கேற்கும்படி தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பிரதமர் கலந்து கொள்வதால் நிச்சயம் மாநில பாஜக தலைவர்களும் புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்பார்கள் என்பது நிச்சயம். இதுவும் காங்கிரஸ், விசிக, மதிமுக, உள்ளிட்ட கட்சிகளுக்கு எரிச்சலை தரலாம். மொத்தத்தில் பார்த்தால் பிரதமர் மோடி தமிழக அரசின் விழாக்களில் கலந்துகொள்ள வருவதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கப்போவது நிச்சயம்.

 

இந்நிலையில் நடிகரும், பாஜகவை சார்ந்தவருமான ராதாரவி ஒரு பொது மேடையில், திருமாவளவா... நீ ஒரு நல்ல ஆம்பளையா இருந்தா மோடி வரும்போது 12ம் தேதி பலூன் விடுடா’’ பார்க்கலாம் என சவால் விட்டுள்ளார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios