Asianet News TamilAsianet News Tamil

நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா ? ராமதாசுக்கு திருமாவளவன் சவால் !!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய பாமக ராமதாசுக்கு ஒரே மேடையில் பதில் அளிக்க  தயார் என்றும், அவரால் பதில் செல்ல முடியமா? எனவும் தொல்.திருமாவளவன் சவால் விடுத்துள்ளார்.

thiruma vs ramadoss about he become a leader
Author
Chidambaram, First Published Mar 29, 2019, 6:28 AM IST

சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட  பாமக ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், திருமாவளவனை தலைவராக்கியதே நான்தான் என்றும், அவரை.. நல்வழிப்படுத்த முயற்சி செய்தேன்.. ஆனால் கேட்கவில்லை.. அவரது தொண்டர்களை வேறு மாதிரி தயார்படுத்தியிருந்தார்.. அவர் மாறவே இல்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், ராமதாசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

thiruma vs ramadoss about he become a leader

இது தொடர்பாக அவர் பேசும்போது, டாக்டர் ராமதாஸ் என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்தார். வாழை இலையில் சாப்பாடு பரிமாறினார். அப்போது, 'திமுக ஒரு துரோக கட்சி. அது அழிந்து போகக் கூடியது. அதனால் அங்கிருந்து வெளியே வந்துவிடு' என்று என்னை வற்புறுத்தினார்.

thiruma vs ramadoss about he become a leader

ஆனால் நான் அதை உதாசீனப்படுத்தினேன். அன்றிலிருந்து  என் மேல சேற்றை வாரி இறைக்கிறதும், வீண் பழி போடறதும் தான் அவர் வேலை. ஆனால் நான் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் திறந்த புத்தகமாக இருக்கிறேன். நான் சொல்றது எதுவும் பொய் கிடையாது. வேண்டுமானால் ஒரே மேடையில் ராமதாசை சந்திக்கவும் நான் தயார் என கூறினார்..

thiruma vs ramadoss about he become a leader

திமுகவில் சீட்டு மட்டுமே கிடைக்கும்.. ஆனா நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி பேரம் பேசி பாமக கூட்டணி அமைத்துள்ளது. உண்மையை சொல்ல போனால், அதிமுக - பாமக கூட்டணிதான் வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி. என்னை சாதியைச் சொல்லி மட்டுமே குற்றம் சுமத்த முடியும் வேறு எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது என திருமாவளவன்  அதிரடியாக தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios