Asianet News TamilAsianet News Tamil

அதிகரிக்கும் கொரோனாவால் 3வது அலை பீதி? மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட சுகாதாரத்துறை அமைச்சர்..!

பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு மிக பெரிய அளவில் பயனளிக்கும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார். 

third wave of corona... Health Minister order to district collectors
Author
Chennai, First Published Jul 31, 2021, 9:55 AM IST

கேரளாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதால்தான் தொற்று அதிகளவில் பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

third wave of corona... Health Minister order to district collectors

இந்நிலையில், உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனை முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- தமிழகத்தில் குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. பாதிப்பிற்கான காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு மிக பெரிய அளவில் பயனளிக்கும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார். 

third wave of corona... Health Minister order to district collectors

கேரளாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதால்தான் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவுடனே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறோம். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கோவையில் மட்டுமே 13 எல்லைகளில் வாகன சோதனை மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios